Friday, July 28, 2023

Tamil Slogams: குன்றக்குடிப் பதிகம்

Tamil Slogams: குன்றக்குடிப் பதிகம்: குன்றக்குடிப் பதிகம் பூரணி பராசக்தி தேவியம் மைதரும்       புதல்வனே பொதிகை மலைவாழ்  புகலரிய குருமுனிக்கு முத்தமிழ் உ...

Saturday, June 10, 2023

எழுதுவோம் தமிழில்!: எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 3

எழுதுவோம் தமிழில்!: எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 3: எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! - 3 ** இக் கோப்பில் 6 வது விழா எனக் குறிக்கப்பட்டுள்ளது. எண்ணுடன் சேர்த்துப் படித்தால் ‘ ஆறுவது வி...

Thursday, February 16, 2023

தமிழ் வரிகள்: சித்திரத்தில் பெண் எழுதி - Chithirathil Pen Eluthi...

தமிழ் வரிகள்: சித்திரத்தில் பெண் எழுதி - Chithirathil Pen Eluthi...: சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மாநிலமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயோ சித்திரத்தில் பெண் எழுதி சீர்படுத்தும் மாநிலமே ஜீவனுள்...

Wednesday, October 19, 2022

J.K. SIVAN'S AALAYA DHARSHAN & STORIES: JOKE

J.K. SIVAN'S AALAYA DHARSHAN & STORIES: JOKE:   யோக்கியதாம்சம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN  ஆன்மிகம்  உயர்ந்த தத்வம், உபநிஷத், கீதை  ஸ்லோகங்கள்  இதெல்லாம் எதுவுமே எழுதாமல்  சும்மா  ஒரு ...

Friday, September 23, 2022

J.K. SIVAN'S AALAYA DHARSHAN & STORIES: JOKE

J.K. SIVAN'S AALAYA DHARSHAN & STORIES: JOKE:   யோக்கியதாம்சம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN  ஆன்மிகம்  உயர்ந்த தத்வம், உபநிஷத், கீதை  ஸ்லோகங்கள்  இதெல்லாம் எதுவுமே எழுதாமல்  சும்மா  ஒரு ...

Friday, June 4, 2021

அதீத கனவுகள்: ரிவிட் அடிப்பது எப்படி? பகவத் கீதையை தீண்டியபோது - 4

அதீத கனவுகள்: ரிவிட் அடிப்பது எப்படி? பகவத் கீதையை தீண்டியபோது - 4: கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முன்னர் நான் எழுதியவைகள் இவை. இனிமேல் மீண்டும் பகவத் கீதையை படித்துவிட்டு எழுதலாம் என இருக்கிறேன். சகோதரி ஒரு...

Tuesday, January 4, 2011

Manam Nondhu

தினமும் நமது வாழ்க்கையில்
எண்ணற்ற சம்பவங்கள் - நிகழ்வுகள் - நம் மனம் நோகும்படி -
வெளியே சொள்ளமுடியாதபடிக்கு
நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அவற்றை உங்களோடு
பகிர்ந்து கொண்டால் சற்று ஆறுதலாயிருக்கும்
என்பதர்க்க்காகத்தான் இந்த பதிவே தவிர
யாருடைய மனதையும் நோகடிக்க வேண்டும் என்பதற்காக
இவை எழுதபபடவில்லை.
இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறாவண்ணம்
அனைவரும் ஒத்துழைப்பார்கள் எனில்
அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள்
யாருடைய  மனமும் நோகாது என்பதில் அய்யமில்லை.

கடந்த ஞாயிறு அன்று திருப்பத்தூருக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நானும்,எனது மனைவி,மகள்,மாப்பிள்ளை ,மாப்பிள்ளையின் தாயார் அனைவரும் கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு  புறப்பட்டு சென்றோம்.
விசேஷம் முடிந்து மாலை சுமார் 6 - 30  மணி அளவில் திருப்பத்தூர் பஸ் ஸ்டான்ட் வந்தோம்.
அன்று பஸ் ஸ்டாண்டில் நிறைய கும்பல்.
ஒரு பஸ் வந்தது
அது திருப்பத்தூர் - பெங்களூர் செல்லும் பஸ்
அனைவரும் அடித்து பிடித்து பஸ் ஏறினோம்
உள்ளே சீட் பிடிப்பதில் தகறாரூ
ஏன் என்றால்
ஒவ்வொரு சீட்டிலும் 
பை,
துண்டு,
கர்சிப் போட்டு வைத்திருந்தனர்.
ஏன் என்றால்
ரிசெர்வேசன்
செய்து வைத்து இருந்தார்களாம்
எப்படியோ சீட் பிடித்து அமர்ந்தோம் 
ஒரு கால் மணி நேரம் கழித்து
மாண்புமிகு கண்டக்டர் அய்யா அவர்கள் வந்தார்கள்
பெங்களூர்,ஹோசூர் டிக்கெட் தவிர
வேறு யாரும் ஏற வேண்டாம்
என்று படிக்கட்டில் நின்று  சத்தம்
போட்டு கூவிவிட்டு
ரைட் கொடுத்தார்
பஸ் நகர தொடங்கியது
டிக்கெட் கொடுத்து கொண்டே வந்த கண்டக்டர்
ஒரே அர்ச்சனைதான்
ஏய்யா! பர்கூர் ஏற வேண்டாம் என்று தானே சொன்னேன்
ஏய்யா! இப்படி ஏறி உயிரை எடுக்கிறீங்க?
என்று சொல்லிக்கொண்டே டிக்கட் கொடுத்துக்கொண்டே வந்தார்
அதிகபட்சம்,
ஒரு நாலு அல்லது ஐந்து டிக்கெட் தான்
பெங்களூர் அல்லது ஹோசூர் டிக்கெட்
ஏறி இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்
வழியில் அங்கங்கு நிறுத்தி
டிக்கெட் ஏற்றிக்கொண்டே தான் வந்தார்
என் முறை வந்ததும் -
அதாவது
என்னிடம் டிக்கெட் கேட்க வந்ததும்
நான் ஐந்து டிக்கெட் கிருஷ்ணகிரி என்று சொன்னேன்
உடனே என்னை பார்த்து
ஏன் சார் உங்களுக்கு எல்லாம் சொன்ன தெரியாதா
பெங்களூர்,ஹோசூர் டிக்கெட் தவிர
யாரும் ஏற வேண்டாம் என்று காட்டு கத்தாய் கத்திக்கொண்டே வருகிறேன்
காது கேக்கலையா ? என்றார்
நான் உடனே அவரிடம் என்ன சார் செய்யறது
வயசாயிடுச்சி (65)காது கேக்கலை என்று சொன்னேன்
அதற்கும் சில அர்ச்சனைகள் 
செய்து கொண்டே டிக்கெட்கொடுத்தார்
டிக்கெட் Rs.16 /- X 5 = Rs 80 -
போக மீதி Rs 20 /- தரவேண்டும்
டிக்கெட் கொடுத்துவிட்டு
நகர்ந்து விட்டார்
எங்க மீதி Rs 20 /-  தரலையே என்று பலமுறை கேட்டும்
காதில் வாங்காதது போல்
குறுக்கும் நெடுக்கும் 
போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்
இதற்கு நடுவில் ,
யாரோ வெங்காய மூட்டை
ஒன்றை போட்டுவிட்டு பேசாமல் உட்கார்ந்து விட்டார்
அதற்கு வெகு நேரம் வரை
யாருது வெங்காய மூட்டை என்று
ஒவ்வொரு ஆளாக கேட்டுக்கொண்டு வந்தார்
ஒருத்தரும் வாயே திறக்க வில்லை
எப்படியோ கிருஷ்ணகிரி பஸ் ஸ்டான்ட் வந்து விட்டது
அதுவரை மீதி காசும் கொடுக்கவில்லை
பஸ் விட்டு இறங்கியதும் கேட்கலாம் என்று இறங்கினால்
நாங்களும் மற்றவர்களும் இறங்கி கொண்டு இருக்கும் பொழுதே
பஸ் ரைட்  கொடுத்து விட்டார்
எனது மாணவி வயது 57 படியில் இருந்து இறங்குவதற்குள்
பஸ் கிளம்பியதால் நாங்களும் இன்னும் மற்றவர்களும்
பஸ் பின் பக்கம் தட்டிக்கொண்டே ஓடிவந்தோம்
கடைசியாக பஸ் நின்றதும்
அங்கு இருந்த வெள்ளை சீருடை அணிந்து இருந்த
போக்குவரத்து அதிகாரியிடம் முறையிட்டோம்
அவர் coductorai கூப்பிட்டு
ஏய்யா !உன் மேல அடிக்கடி இப்படி கம்ப்ளைன்ட் வருது
நீ திருந்தவே மாட்டியா?
என்று சத்தம் போட்டுவிட்டு 
நீங்க ஒரு கம்பளைன்ட் எழுதி கொடுங்க சார்
என்று சொல்லிவிட்டு பொய் விட்டார்
யாரிடம் கம்ப்ளைன்ட் கொடுப்பது
எங்கு கொடுப்பது என்று தெரியாமல் நாங்களும் முழித்துக்கொண்டேவந்துவிட்டோம்
இதற்குள் எங்களை சுற்றி நாலைந்து சீருடை அணிந்த டிரைவர்,கண்டக்டர்கள்
வந்து ஏதோ அவருக்கு பாதுகாப்புக்கு
நிற்பது போல வந்து நின்றதால்
நாங்கள் செய்வது அறியாது வந்துவிட்டோம்
இந்த கண்டக்டர் மற்றும் டிரைவர் வேறு யாருமல்ல
நமது தமிழக அரசு போக்குவரத்து கழக நிறுவனத்தை சார்ந்தவர்கள்
நமது தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்தும்
பணியில் அக்கறை கிடையாது
பொறுப்பில்லாமல் இப்படி நடந்து கொள்கிறார்கள்
என்பதை நினைக்கும் பொது மனது மிகவும் நொந்துபோகிறது!
அவர்களை மன்றாடி கேட்டுக் கொள்வதென்னவென்றால்
பயணிகளை மனித்பிமானத்துடன் நடத்துங்கள்
அவர்கள் காசுக்கு ஆசைப்படாதீர்கள்
வாங்கும் சம்பளத்துக்கு நியாயமாக - கொஞ்சமாவது -நடந்து கொள்ளுங்கள்
அப்போதுதான் மக்கள் அரசு பஸ் களில் பயணம் செய்ய விரும்புவார்கள்.